வட இந்தியாவில் நேற்று மாலை 5.02 மணிக்கு திடீரென்று மிதமான பூமி அதிர்ச்சி ஏற்பட்டது.
இந்திய நேபாள எல்லையை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த பூமி அதிர்ச்சி தலைநகர் டெல்லி, உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத், ராம்பூர், மீரட், மொரதாபாத் ஆகிய இடங்களிலும், பஞ்சாப், அரியானா மாநிலங்கள், யூனியன் பிரதேசமான சண்டிகார், ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் உள்ளிட்ட சில பகுதிகளிலும், உத்தரகாண்ட், காஷ்மீர், இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் உணரப்பட்டது.
ரிக்டர் அளவில் 5.7 புள்ளியான பதிவான இந்த பூமி அதிர்ச்சி சில இடங்களில் 20 வினாடிகள் நீடித்தது. டெல்லியில் இருந்து 363 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 4.3 கிலோ மீட்டர் ஆழத்தில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டதாக அமெரிக்க பூகோள ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
பூமி அதிர்ச்சி ஏற்பட்டபோது உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூன், நைனிடால், அலமோரா, பாகேஷ்வர், பிதோராகார், உத்தம்சிங் நகர், சமோலி ஆகிய இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் லேசாக குலுங்கின.
பூமி அதிர்ச்சியினால் நரோரா அணுமின் நிலையத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், அணு உலைகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி என்.நாகைச் தெரிவித்தார்.
இந்திய நேபாள எல்லையை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த பூமி அதிர்ச்சி தலைநகர் டெல்லி, உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத், ராம்பூர், மீரட், மொரதாபாத் ஆகிய இடங்களிலும், பஞ்சாப், அரியானா மாநிலங்கள், யூனியன் பிரதேசமான சண்டிகார், ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் உள்ளிட்ட சில பகுதிகளிலும், உத்தரகாண்ட், காஷ்மீர், இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் உணரப்பட்டது.
ரிக்டர் அளவில் 5.7 புள்ளியான பதிவான இந்த பூமி அதிர்ச்சி சில இடங்களில் 20 வினாடிகள் நீடித்தது. டெல்லியில் இருந்து 363 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 4.3 கிலோ மீட்டர் ஆழத்தில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டதாக அமெரிக்க பூகோள ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
பூமி அதிர்ச்சி ஏற்பட்டபோது உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூன், நைனிடால், அலமோரா, பாகேஷ்வர், பிதோராகார், உத்தம்சிங் நகர், சமோலி ஆகிய இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் லேசாக குலுங்கின.
சண்டிகாரிலும் வீடுகள், கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இதனால் உள்ளே இருந்தவர்கள் பயத்தில் வெளியே ஓடி வந்தனர். இந்த பூமி அதிர்ச்சியினால் உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக உடனடியாக தகவல் எதுவும் இல்லை என்று டெல்லியில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் நரோரா அணுமின் நிலையம் உள்ளது. பூமி அதிர்ச்சி மையம் கொண்டிருந்த இடத்தில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் இந்த அணுமின் நிலையம் உள்ளது.பூமி அதிர்ச்சியினால் நரோரா அணுமின் நிலையத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், அணு உலைகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி என்.நாகைச் தெரிவித்தார்.
Tags:
natural disasters