கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்ட வழக்கில் ஆமதாபாத் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கோத்ராவில் எரிக்கப்பட்ட ரயில்
கோத்ராவில் எரிக்கப்பட்ட ரயில்-2002

குஜராத்தில் ரயில் எரிப்பு வழக்கில் கரசேவகர்கள் 59 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 11 பேருக்கு தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து குஜராத் சிறப்பு கோர்ட் அதரடியான தீர்ப்பை வெளியிட்டது.

கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதியன்று உ.பி. மாநிலம் அயோத்தியா சென்று சபர்மிதி எக்ஸ்பிரஸ் மூலம் ஏராளமான சாதுக்கள் திரும்பிக்கொண்டிருந்தனர். குஜராத் கோத்ரா ரயில் நிலையத்தில் வன்முறை கும்பல் ஒன்று ரயிலுக்கு தீ வைத்து எரித்தது. இதில் 59 கரசவேகர்கள் கொல்லப்பட்டடனர். இதனை தொடர்ந்து மாநிலத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் ஐ.எஸ்.ஐ., அமைப்பு தலைமறைவில் இந்த சதி திட்டம் நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு அதன் தலைவர் மாஜி சி.பி.ஐ. இயக்குனர் ராகவன் தலைமையில் விசாரணை நடைபெற்றது. வழக்கு விசாரணை ஆமதாபாத் சிறப்பு கோர்ட்டில் நடந்தது.

இந்த வழக்கில் மொத்தம் 134 பேர் சேர்க்கப்பட்டனர். 80 பேர் சிறையில் உள்ளனர். 15 பேர் ஜாமீனில் உள்ளனர். 13 பேர் ஆதாரமின்மையால் விடுவவிக்கப்பபட்டனர். 16 பேர் தலைமறைவாக உள்ளனர்.

இந்த வழக்கில் விசாரணை ஒருதலைபட்சமாக நடப்பதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் 2008-ம் ஆண்டு ஆர்.கே.ராகவன் தலைமையில் வேறு சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


என்ன குற்றம் புரிந்தனர் இவர்கள் ? : தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது பதிவு செய்யப்பட்டு கோர்ட் ஏற்றுக்கொண்ட குற்றப்பிரிவுகள் விவரம் வருமாறு: செக்ஷன் 302 ( கொலைக்குற்றம்), 307 ( கொலை முயற்சி), 120 பி ( கிரிமினல் சதி), 147, 148 ( கொடும் ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபடுதல்), 323, 324, 325, 326, ( காயப்படுத்துதல்), 153 ஏ., ( இரு மதபிரிவினர்கள் இடையே பகைமை உண்டாக்குதல்) மற்றும் ரயில்வே துறை சட்டத்தின் படி பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தில் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. இந்த குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டு கோர்ட் ஏற்றுக்கொண்டது.


மரணத்தண்டனை பெற்ற 11 பேர் யார் ? :

1. ஜாபபீர் பின்யாமின் பெக்ரா.
2. பிலால் இஸ்மாயில் அப்துல் மஜீத் .
3.ரம்சானி பெக்ரா.
4.ரஜத்குர்துர்.
5.சிராஜ் முகம்மது என்ற பாலா.
6.இர்பான் போபா கலந்தர்
7.மெகபூப் கலித் சந்திரா.
8.சலீம் என்ற சல்மான் ஜர்தா.
9.இர்பான் முகம்மது.
10.மெகபூப் அகம்மது யூசூப் ஹசன் லத்திகா.
11.பாபா சாப்லு.
Previous Post Next Post