லிபியா தலைவர் கடாபிக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இதனையடுத்து இரு தரப்பினருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.
லிபியா வான்வெளியில் விமானங்கள் பறக்க ஐ.நா., தடை விதித்துள்ளது. இந்நிலையில் போரை நிறுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகையில், உடனடியாக போரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஐ.நா., கொள்கைகளை லிபியா மதித்து நடப்பதாகவும் கூறினார்.
Tags:
World