ராஜஸ்தானில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உயிரோடு எரித்துக்கொலை

ராஜஸ்தான் மாநிலம் சவாய் மதோபூர் மாவட்டத்தில் உள்ளது சுத்வால் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி கொள்ளையர்கள் ஒரு பெண்ணை கொலை செய்து நகை பணத்தை கொள்ளையடித்து சென்றனர். போலீசார் இதுவரை கொள்ளை கும்பலை கைது செய்யவில்லை.

இதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது 2 பேர் அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் ஏறி நின்று போலீசை கண்டித்து கீழே குதிக்கப் போவதாக மிரட்டினார்கள். அதில் ஒருவர் திடீரென கீழே குதித்து உயிர் இழந்தார்.

இதனால் போராட்ட கும்பல் ஆத்திரம் அடைந்தது. அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் போல் முகமது ஜீப்பில் அங்கு வந்தார். ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த கும்பல் அவர் மீது தாக்குதல் நடத்தினார்கள். அவர் வந்த ஜீப்புக்கு தீ வைத்தனர்.

இதில் போல் முகமது உடல் கருகி உயிர் இழந்தார். போராட்டக்காரர்கள் தாக்கியதில் 16 போலீசார் படுகாயம் அடைந்தனர். கும்பலை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.

Previous Post Next Post