1984 ஆம் ஆண்டு, டிசம்பர் 3ஆம் தேதி இரவு போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தின் பூச்சி மருந்து தொழிற்சாலையில் இருந்து மீதைல் ஐசோசயனைட் என்கிற விஷ வாயு வெளியேறி, போபால் நகரின் ஒரு பகுதியையே மரணக்காடாக்கியது.
23,000 அப்பாவி உயிர்களை பலிகொண்ட போபால் விஷ வாயுக் கசிவு வழக்கின் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சண் அமெரிக்காவுக்கு தப்பி சென்றுவிட்டார்.

இந்நிலையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலருக்கு கடந்த ஆண்டு நீதிமன்றம் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதே சமயம் ஆண்டர்சன் அமெரிக்கா தப்பி சென்று விட்டதால் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வந்து, அவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் ஆண்டர்சனை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதிக்க கோரி, டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இம்மனுவை இன்று விசாரித்த நீதிபதி வினோத் யாதவ்,ஆண்டர்சனை இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வருவது தொடர்பான கோரிக்கையை மத்திய அரசு மூலம் முன்வைக்க சிபிஐ-க்கு அனுமதி அளித்தார்.

Tags:
Justice