கற்பழிப்பு வழக்கில் இஸ்ரேல் முன்னாள் அதிபருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை


கற்பழிப்பு வழக்கு இஸ்ரேல் நாட்டின் முன்னாள் அதிபர் மோஷி கத்சாவ் (65). இவர் கடந்த 2000-ம் ஆண்டில் அதிபராக பதவி வகித்தார். அப்போது தனது அலுவலகத்தில் பணிபுரிந்த ஒரு பெண் ஊழியர் மற்றும் 2 பெண்ணை கற்பழித்ததாக இவர் மீது புகார் கூறப்பட்டது.

இதை தொடர்ந்து அவர் மீது டெல்அவிவ் நகரில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.  இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் பெண்களை கற்பழித்த கத்சாவுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.மேலும் ரூ.11 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இது தவிர கற்பழிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.3 லட்சம் நஷ்டஈடு வழங்கும்படியும் உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் 2 நீதிபதிகள் அவருக்கு எதிராகவும், ஒரு நீதிபதி ஆதரவாகவும் தீர்ப்பளித்தனர். மேல் முறையீடு இதற்கிடையே, இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு (அப்பீல்) செய்யவும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதற்கு வசதியாக அவரை வருகிற மே 8-ந்தேதி ஜெயிலில் அடைக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக கத்சாவின், வக்கீல் அறிவித்துள்ளார். இஸ்ரேல் வரலாற்றில் உயர் பதவியில் உள்ள ஒருவருக்கு இதுபோன்ற மிகப்பெரிய தண்டனை வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
Previous Post Next Post