புதுதில்லி, பிப்.3: 2 ஜி ஊழல் வழக்கு மற்றும் காமன்வெல்த் ஊழல் வழக்கில் ஆ.ராசாவையும், சுரேஷ் கல்மாடியையும் பலிகடா ஆக்க வேண்டாம் என பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது.
ஆ.ராசாவால் எடுக்கப்பட்ட முடிவுகளும், இதர அமைச்சர் எடுக்கும் முடிவுகளும் மத்திய அமைச்சரவை மற்றும் பிரதமரின் அனுமதியின் பேரில்தான் எடுக்கப்படுகின்றன.
எனவே இந்த விவகாரத்தில் ராசாவின் காப்பாளர் யார் என்பதையும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் நாட்டுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதுதான் சரியாக இருக்கும் என பாஜக தலைவர் நிதின் கட்கரி தெரிவித்தார்.2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்படும் வரை மொத்த உண்மையும் வெளிவராது என்பதில் பாஜக உறுதியாக உள்ளது என அவர் கூறினார்.
Tags:
Correption