திமுக பொதுக்குழு முடிவு: கி.வீரமணி பாராட்டு

சென்னை, பிப்.3: ஆ.ராசா கைது தொடர்பாக திமுக பொதுக்குழு எடுத்த முடிவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஆ.ராசா கைது பிரச்னையில் திமுக பொதுக்குழு ஒரு சரியான, தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. 

குற்றம் சுமத்தப்பட்டதாலேயே அவர் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டவர் ஆக மாட்டார் என்ற பொதுநியதிக்கு ஏற்ப, சரியான தெளிவான முடிவை எடுத்த
திமுக தலைவருக்கும், பொறுப்பாளர்களுக்கும், பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் திகவின் பாராட்டுகள் என வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post