ட்விட்டர் வலைத்தளத்தில் தான் சேரவில்லை என்றும் தன் பெயரை யாரோ போலியாக பயன்படுத்துகிறார்கள் என்றும் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
சமுதாய நெட்வொர்க் வலைத்தளமான ட்விட்டரில் என் பெயரில் எழுதப்படுவது குறித்து எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. நான் ட்விட்டரில் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
போலீஸ் சைபர் க்ரைம் மூலமாக இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags:
Crime