து‌ப்பா‌க்‌கி கொடு‌த்தா‌ல் ம‌ட்டுமே ‌பிர‌ச்சனை‌க்கு மு‌‌ற்று‌ப்பு‌ள்‌ளி


''த‌மிழக ‌மீனவ‌ர்களு‌க்கு ஆயுத‌ப் ப‌யி‌ற்‌சி‌க் கொடு‌த்து அவ‌ர்களு‌க்கு து‌ப்பா‌‌க்‌கிகளு‌ம் வழ‌ங்க‌ப்ப‌ட்டா‌ல் ஒ‌ழிய இ‌ப்‌பிர‌ச்சனை‌க்கு மு‌ற்று‌ப்பு‌ள்‌ளி வை‌க்க வேறுவ‌ழி‌யி‌ல்லை'' எ‌ன்று இல‌ங்கை‌‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ.நெடுமாற‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அற‌ி‌க்கை‌யி‌ல், 1983 ஆ‌ம் ஆ‌ண்டி‌லிரு‌ந்து 27 ஆ‌ண்டுகளாக த‌‌மிழக ‌மீனவ‌ர்களை ‌சி‌‌ங்கள‌க் கட‌ற்படை தொட‌ர்‌ந்து வே‌ட்டையாடி வரு‌கிறது. இதுவரை 400‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ‌மீனவ‌ர்க‌ள் படுகொலை செ‌ய்ய‌‌ப்‌ப‌ட்டிரு‌க்‌கிறா‌ர்‌க‌ள். ‌‌‌மீனவ‌ர்க‌ள் ‌சிறை‌ப்‌பிடி‌த்து‌ச் செ‌ல்ல‌ப்ப‌ட்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள்.

ந‌ம்முடைய கட‌ல் எ‌ல்லை‌க்கு‌ள்ளாகவே ‌சி‌ங்கள‌க் கட‌ற்படை அ‌த்து‌மீ‌றி நுழை‌ந்து ‌மீனவ‌ர்களை‌‌த் தா‌க்‌கி வரு‌‌கிறது. ஆனா‌ல் இ‌ந்த 27 ஆ‌ண்டுகால‌த்‌தி‌ல் ஒருமுறைகூட இ‌ந்‌திய‌க் கட‌லோர‌க் காவ‌ல் படை ‌சி‌ங்கள‌க் க‌ட‌ற்படையை எ‌தி‌ர்‌த்து‌ச் சு‌ட்ட‌தி‌ல்லை. ‌‌‌மீனவ‌ர்களை‌க் கா‌ப்பா‌ற்றுவத‌ற்கு‌ம் மு‌ன்வர‌‌வி‌ல்லை.

உலக‌த்‌தி‌ன் ஐ‌ந்தாவது பெ‌ரிய கட‌ற்படை இ‌ந்‌திய‌க் கட‌ற்படை என‌ப் பெருமை‌ப் பேச‌ப்படு‌கிறது. பல ஆ‌யிர‌ம் மை‌ல்களு‌க்கு அ‌ப்பா‌ல் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா‌வி‌ல் இரு‌க்கு‌ம் சோமா‌லியா நா‌ட்டி‌‌ன் கட‌ற்பகு‌தி‌யி‌ல் கட‌ற்கொ‌ள்ளைகார‌ர்க‌ளி‌ன் அ‌ட்டூ‌ழிய‌ங்களை ஒடு‌‌க்குவத‌ற்கு இ‌ந்‌திய‌க் கட‌ற்படை ‌விரை‌ந்து செ‌ன்று நடவடி‌க்கை எடு‌க்‌கிறது. ஆனா‌ல் நமது கட‌‌ல் பகு‌தி‌யி‌ல் நமது ‌மீனவ‌ர்க‌ள் அ‌ண்டை நாடு கட‌ற்படை‌யா‌ல் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்படுவதை‌த் தடு‌க்க மு‌ன்வராம‌ல் இ‌ந்‌திய‌க் கட‌ற்படை வேடி‌க்கை‌ப் பா‌ர்‌‌க்‌கிறது.

குஜரா‌த் மாநில‌த்தை‌ச் சே‌ர்‌ந்த ‌மீனவ‌ர்க‌ள் கட‌‌லி‌ல் எ‌ல்லை‌த்தா‌ண்டி பா‌கி‌ஸ்தா‌ன் பகு‌தி‌யி‌‌‌ல் புகு‌ந்து ‌வி‌ட்டாலோ, மே‌ற்கு வ‌ங்க‌த்தை‌ச் சே‌ர்‌ந்த ‌மீனவ‌ர்க‌ள் எ‌ல்லை‌த்தா‌ண்டி வ‌ங்கதேச‌ம், ‌மியா‌ன்ம‌ர் கட‌ற்பகு‌தி‌யி‌ல் புகு‌ந்து‌வி‌ட்டாலோ அவ‌ர்களை அ‌ந்த‌ந்த நா‌ட்டு அரசு‌க‌ள் கட‌ற்படைக‌ள் சு‌ட்டு‌க் கொ‌‌ல்வ‌தி‌ல்லை.

எ‌ச்ச‌ரி‌த்து ‌திரு‌‌ப்‌பி அனு‌ப்பு‌கிறா‌ர்க‌‌ள் அ‌‌ல்லது கைது செ‌ய்‌கிறா‌ர்க‌ள். இ‌ந்‌திய அரசு தலை‌யி‌ட்டவுட‌ன் அவ‌ர்க‌ள் இ‌ந்‌திய ‌மீனவ‌ர்களை ‌விடுதலை செ‌ய்து ‌‌திரு‌‌ப்‌பி அனு‌ப்பு‌கிறா‌ர்க‌ள். உலகெ‌ங்கு‌ம் இதுதா‌ன் நடைமுறை வழ‌க்கமாகு‌ம்.

ஆனா‌‌ல் த‌மிழக ‌மீனவ‌ர்களை ம‌ட்டு‌ம் கட‌ந்த 27 ஆ‌ண்டு காலமாக ‌சி‌ங்கள‌‌க் கட‌ற்படை தொட‌ர்‌‌ந்து சு‌ட்டு‌க் கொ‌ன்று வரு‌கிறது. நமது ‌மீனவ‌ர்களை‌க் கா‌ப்பா‌ற்ற இ‌ந்‌திய‌க் கட‌ற்படையோட, கடலோர‌க் காவ‌ல்படையோ ஒருபோது‌‌ம் மு‌ன்வர‌வி‌ல்லை. இராமே‌சுவர‌த்த‌ி‌ற்கு அரு‌கி‌ல் உ‌ள்ள ம‌ண்டப‌த்த‌ி‌ல் இ‌ந்‌திய‌க் கட‌லோர‌க் காவ‌ல்படை‌யி‌ன் தலைமை அலுவலக‌ம் அமை‌ந்‌திரு‌க்‌கிறது.

மிக ‌விரைவாக செ‌ல்ல‌க் கூடிய படகுக‌ள் அ‌ங்‌கிரு‌க்‌கி‌ன்றன. ராடா‌ர் கரு‌விகளு‌ம் பொரு‌த்த‌ப்ப‌ட்டிரு‌க்‌கி‌ன்றன. கட‌ற்படை‌ச் சார‌்‌ந்த உல‌ங்கு வானூ‌‌ர்‌திக‌ள் அடி‌க்கடி கட‌ற்பகு‌தி‌‌யி‌ல் பற‌ந்து செ‌ன்று க‌ண்கா‌ணி‌க்‌கி‌ன்றன. ஆனாலு‌ம் இவை அ‌த்தனையு‌ம் ‌மீ‌றி நமது கட‌ல் பகு‌தி‌க்கு‌ள் ‌சி‌ங்கள‌க் கட‌ற்படை புகு‌ந்து நமது ‌மீனவ‌ர்களை வே‌ட்டையாடி‌க் கொ‌ல்‌கிறது எ‌ன்று சொ‌ன்னா‌ல் அதை இ‌ந்‌திய கடலோர‌க் காவ‌ல்படை வேடி‌க்கை பா‌ர்‌க்‌கிறது எ‌ன்றா‌ல் காரண‌ம் ஒ‌ன்றே ஒ‌ன்றுதா‌ன் நமது ‌மீனவ‌ர்‌க‌ள் த‌மிழ‌ர்‌க‌ள் எ‌ன்பதேயாகு‌ம்.

சி‌ங்கள அரசு‌க்கு‌க் க‌ண்டன‌‌ம் தெ‌ரி‌வி‌ப்ப‌தினா‌ல் ம‌ட்டு‌ம் இ‌ந்‌திய‌, த‌மிழக அர‌சுக‌ளி‌ன் பொறு‌ப்பு ‌தீ‌ர்‌ந்து‌விடாது. த‌மிழக ‌மீன‌வ‌ர்களை கா‌ப்பா‌ற்றுவத‌ற்கு தவ‌றிய இ‌ந்‌திய‌க் கடலோர‌க் காவ‌ல்படை அ‌திகா‌ரிக‌ள் ‌மீ‌து உடனடியாக நடவடி‌க்கை எடு‌க்க‌ப்ப‌ட்டா‌ல் ஒ‌ழிய அவ‌ர்க‌ள் த‌மிழக ‌மீனவ‌ர்களை பாதுகா‌க்க எதுவு‌ம் செ‌ய்ய மா‌ட்டா‌ர்‌க‌ள்.

த‌மிழக ‌மீனவ‌ர்களு‌க்கு ஆயுத‌ப் ப‌யி‌ற்‌சி‌க் கொடு‌த்து அவ‌ர்களு‌க்கு து‌ப்பா‌‌க்‌கிகளு‌ம் வழ‌ங்க‌ப்ப‌ட்டா‌ல் ஒ‌ழிய இ‌ப்‌பிர‌ச்சனை‌க்கு மு‌ற்று‌ப்பு‌ள்‌ளி வை‌க்க வேறுவ‌ழி‌யி‌ல்லை எ‌ன்று பழ.நெடுமாற‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
Previous Post Next Post