சென்னையில் சிங்களர்களால் நடத்தப்படும் புத்த மடாலயம் மீது அடையாளம் தெரியாதவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எழும்பூரில் மாநகர காவல்துறை ஆணையர் எதிரில் உள்ள மகாபோதி சங்கத்தில் நேற்றிரவு சென்ற கும்பல் ஒன்று அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
வரவேற்பு அறையில் இருந்த புத்தர் சிலைகள், கண்ணாடி அலமாரிகள், தொலைக்காட்சி பெட்டிகளை மர்ம கும்பல் அடித்து நொறுக்கியது.
இதில் கொழும்பு பல்கலைக்கழக துணைவேந்தர், 4 புத்த துறவிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களை சென்னையில் உள்ள இலங்கை தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி சந்தித்து ஆறுதல் கூறினார். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இந்த பகுதியில் நடந்துள்ள தாக்குதல் நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல் நடத்திய மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் அங்கு காவலர்கள் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:
Crime