அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினாலோ, ஊழல் செய்து சிக்கினாலோ அவர்களை உடனடியாக “டிஸ்மிஸ்” செய்ய இடமில்லை. முதலில் அவர்கள் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள். பின்னர் கோர்ட்டு அவர்கள் குற்றத்தை உறுதி செய்தால் மட்டுமே டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள். கோர்ட்டு தீர்ப்பு வருவதற்கு நீண்ட காலம் ஆவதால் அவர்கள் முறையான தண்டனையை பெறுவதில் கால தாமதமாகி வருகிறது.
இதை தடுக்க புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதன்படி அரசு ஊழியர்கள் யாரேனும் லஞ்ச ஊழலில் சிக்கினால் அவர்கள் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள். இந்த சட்டத்தின்படி லஞ்ச ஊழலில் சிக்கும் அரசு ஊழியர்களை விசாரிக்க தனி கமிட்டி ஒன்று அமைக்கப்படும். அந்த கமிட்டி ஊழலில் சிக்கும் அரசு ஊழியர்களிடம் உடனடியாக விசாரணை நடத்தும்.
அவர் குற்றம் செய்ததற்கான முகாந்திரம் தெரிந்தால் அது பற்றி அறிக்கை கொடுப்பார்கள். இந்த அறிக்கை கிடைத்ததும் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள். பின்னர் இந்த வழக்கில் கோர்ட்டு அவர் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பு கூறினால் அவரது டிஸ்மிஸ் விலக்கி கொள்ளப்படும். இந்த சட்டத்தை வருகிற பாராளுமன்ற கூட்டத்திலேயே தாக்கல் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த சட்டத்தை அரசு பொறுப்புகளில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் நீடிக்கவும் இடம் செய்யப்பட உள்ளது. உயர் அதிகாரிகள் மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்கள் ஊழல் செய்தால் அவர்கள் மீது விசாரணை நடத்த விசாரணை அமைப்புகள் அரசிடம் அனுமதி கேட்க வேண்டியது உள்ளது. இதை தளர்த்தவும் முடிவு செய்துள்ளனர்.

Tags:
Correption