காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்கலால் சவுக்கில் வருகிற 26-ந்தேதி குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடியேற்ற போவதாக பாரதீய ஜனதா இளைஞர் அணி அறிவித்துள்ளது.
இதற்கு காஷ்மீர் முதல்- மந்திரி உமர்அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் அரசு சார்பில் மட்டுமே தேசிய கொடியேற்றப்படும். மற்ற கட்சிகளுக்கு அனுமதி கிடையாது என்று அவர் கூறினார். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உமர் அப்துல்லா கூறினார்.
ஆனால் திட்டமிட்டப்படி 26-ந்தேதி லால்சவுக்கில் தேசிய கொடியேற்றப்படும் என்று பாரதீய ஜனதா அறிவித்துள்ளது. இதற்காக கொல்கத்தாவில் இருந்து ஸ்ரீநகருக்கு பாரதீய ஜனதா இளைஞர் அணியினர் யாத்திரையாக புறப்பட்டு செல்கிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து முதல்-மந்திரி உமர் அப்துல்லா டெல்லியில் காங் கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்துறை மந்திரி ப.சிதம்பரம் ஆகியோரை சந்தித்துப் பேசினார். பின்னர் ஜம்முவில் உயர் அதிகாரிகள் கூட்டத்தை முதல்-மந்திரி உமர்அப்துல்லா கூட்டி ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு காஷ்மீர் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், லால் சவுக்கில் 26-ந்தேதி பாரதீய ஜனதாவை தேசிய கொடியேற்ற அனுமதிக்க மாட்டோம், அந்த கட்சியின் யாத்திரையை காஷ்மீருக்குள் நுழைய விட மாட்டோம் என்று கூறப்பட்டுள்ளது.
பாரதீய ஜனதா யாத்திரை லங்கன்பூர் வழியாக காஷ் மீருக்குள் நுழைகிறது. இது ஜம்முவில் இருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ளது. லங்கன்பூரில் பாரதீய ஜனதா யாத்திரையை தடுத்து நிறுத்த காஷ்மீர் அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் 26-ந்தேதி குடியரசு தின விழாவின் போது அசம்பாவிதங்கள் ஏற்படா மல் தடுக்க பாதுகாப்பு நட வடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அன்றைய தினம் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் போலீசுக்கு காஷ்மீர் அரசு உத்தரவிட்டு உள்ளது.

Tags:
Political