இந்தோனேசிய வீட்டுப் பணிப் பெண் ஒருவரை துன்புறுத்தியற்காக மலேஷிய பெண்மணி ஒருவருக்கு விதிக்கப்பட்டிருந்த சிறை தண்டனை உயர்த்தப்பட்டுளது.
தனக்கு விதிக்கப்பட்ட எட்டு ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, அந்தப் பெண்மணி மலேஷிய உச்சநீதிமன்றத்தில் முறையிட, நீதிமன்றமோ அவருக்கு கூடுதலாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தமது வீட்டில் வேலை செய்ய வந்த அந்த இந்தோனேசியப் பணிப் பெண் மீது வெந்நீர் ஊற்றியும், கத்தரிக்கோல் மற்றும் சுத்தியலைக் கொண்டும் தாக்குதல் நடத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் இந்த மலேஷியப் பெண்மனி குற்றவாளி என்று கண்டறியப்பட்டு அவருக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
மலேஷியாவில் தமது நாட்டு பணிப் பெண்கள் நடத்தப்படும் முறை குறித்த சர்ச்சை தொடருகின்ற நிலையில், அங்கு தமது நாட்டு பிரஜைகள் வேலைக்கு செல்வதை இந்தோனேசியா தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Justice