கறுப்பு பணத்தை மீட்பதில் மத்திய அரசு நடவடிக்கை என்ன-?

 
இந்தியாவில் உள்ளவர்கள் வெளிநாடுகளில் சேர்த்து வைத்திருக்கும் கறுப்பு பணம் 70 லட்சம் கோடியாக இருக்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பணத்தை மீட்பது குறித்து மத்திய அரசின் செயல்பாட்டிற்கு சில நாட்களுக்கு முன் சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. எதிர்க்கட்சிகளும் கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி வருகின்றன.

இதற்கு பதிலளித்து பேசிய பிரதமரும், நிதியமைச்சர் பிராணப் முகர்ஜியும் கறுப்பு பணத்தை வைத்துள்ளவர்களின் பட்டியலை பகீங்கரமாக வெளியிட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர். மேலும் கறுப்பு பணத்தை சேர்த்து வைத்துள்ள நாடுகளிடம் ஒப்பந்தம் செய்துள்ள சட்ட முடிவுகளை காரணம் காட்டி கறுப்பு பண படடியலை வெளியிட முடியாது என நிதியமைச்சர் தெரிவித்திருந்தார்.

மேலும் விரைவில் கறுப்பு பணம் வைத்துள்ளவர்களின் பட்டியலை வைத்து அவர்களின் வரிவசூல் செய்வதற்கு கோர்ட்டில் வருமான வரித்துறையினர் கோர்ட்டில் வழக்கு தொடரும்போது அனைவருக்கும் தெரிய வரும் என்றும், கறுப்பு பணம் வைத்துள்ளவர்களிடம் வரிவசூல் செய்ய அரச நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்த விசாரணையில் நீதிபதி எஸ்.சுதர்சன் ரெட்டி தலைமையிலான பெஞ்ச் கறுப்பு பண விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து கடுமையாக கேள்வி எழுப்பி உள்ளனர். சட்டத்திற்கு புறம்பாக கறுப்பு பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளவர்களின் பட்டியல் என்ன? அவர்கள் மீது எடுத்துள்ள மற்றும் எடுக்கவுள்ள நடவடிக்கை என்ன? இந்தியாவிற்கு அந்த பணத்தை கொண்டுவர அரசு எடுக்கும் நடவடிக்கை என்ன? என கோர்ட்டு அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளது.

மேலும் அரசு வரிவிதிப்பை பற்றி மட்டும் இங்கு பேசுவதாகவும், ஆனால் கறுப்பு பணம் போதை பொருள் கடத்தல் மற்றும் தவறான வழிகளில் சேர்க்கப்பட்டதாகவும், அதனை கொண்டு வர எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்து சில நாட்களில்  பதிலளிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

மேலும் அரசு வெளிநாடுகளுடன் செய்துள்ள சட்ட ஒப்பந்தங்களால் கறுப்பு பணம் வைத்துள்ளவர்களின் பட்டியலை வெளியிடுவதில் உள்ள பிரச்சினைகளையும் விளக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் மத்திய அரசை கடுமையாக சாடினார்கள்.

இந்த வழக்கை மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மற்றும் அனில்தேவன் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post