ராகு, கேது தோஷம் நீங்க வழிபாடு: எடியூரப்பா தரிசனம்

 
கர்நாடக முதல்வர் எடியூரப்பா நில மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கர்நாடக கவர்னர் பரத்வாஜ், நில மோசடி தொடர்பாக முதல்வர் எடியூரப்பா மீது வழக்கு தொடர அனுமதி அளித்தார். இதனால் கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சியினர் கலவரத்தில் ஈடுபட்டனர். எடியூரப்பாவுக்கு தொடர்ந்து நெருக்கடி நிலை ஏற்பட்டதற்கு ராகு-கேது தோஷம்தான் காரணம் என்று அவரது ஜோதிட நிபுணர் கூறினார்.

இதையடுத்து எடியூரப்பா நேற்று காளகஸ்தி கோவிலுக்கு சென்று ராகு- கேது சர்ப்ப தோஷம் நிவாரண பூஜை செய்தார். பின்னர் வாயுலிங்கேஷ்வரரை தரிசனம் செய்தார்.   தரிசனம் முடிந்து வெளியே வந்த எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது தலைமையிலான அரசு முழு பதவி காலமும் நீடிக்கும். நான் தொடர்ந்து முதல் மந்திரியாக நீடிப்பேன். கர்நாடக மாநிலம் நல்ல வளர்ச்சியை அடைய வேண்டும் என்றும், அதற்கு ஏற்படும் தடைகளை நீக்க கோரியும் வாயுலிங்கேஸ்வரரை வழிபட்டேன். கர்நாடகத்தை இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக மாற்றும் எனது லட்சியத்திற்கு வாயுலிங் கேஸ்வரர் துணை இருப்பார்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
Previous Post Next Post