ஐஸ்லாந்து வங்கிகளில் கவர்ச்சிகரமான வட்டிகள் கிடைப்பதாக அறிந்து பிரிட்டன் மற்றும் நெதர்லாந்தை சேர்ந்தவர்கள் ஐஸ்லாந்து வங்கிகளில் முதலீடு செய்தனர். ஆனால் கடந்த 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற மாபெரும் வங்கி திவாலில் ஐஸ்லாந்து வங்கிகளும் சிக்கி கொண்டன.
கடன் சுமையால் மூன்று ஐஸ்லாந்து வங்கிகள் புதையுண்டுன. இவற்றில் ஒரு வங்கி தான் லேண்ட்ஸ்பேங்கி, இந்த வங்கியின் ஒரு பிரிவான ஐஸ்சேவ் வங்கி அதிக வட்டி கொடுப்பதாக கேள்விப்பட்டு, பிரிட்டன் மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த பலர் கிட்டதட்ட 500 கோடி டாலர்களை இங்கே முதலீடு செய்தார்கள். ஆனால் அந்த பணம் அனைத்தும் திவாலாகி போன வங்கியோடு சேர்த்து மக்கி விட்டன.
முதலீடு செய்தவர்களுக்கு அவர்களுடைய நாட்டு அரசாங்கம் நஷ்ட ஈட்டை கொடுத்து விட்டது. இந்த நஷ்ட ஈட்டு தொகையை அந்தந்த அரசுகளுக்கு திருப்பி கொடுப்பது என ஐஸ்லாந்து அரசாங்கமும் ஒப்பு கொண்டிருந்தது. இவ்வாறு செய்வதன் மூலம் ஐஸ்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைத்து கொள்ளப்படும் என ஐஸ்லாந்து எதிர்ப்பார்த்தது.
இந்த நிலையில் மற்ற நாடுகளுக்கு திருப்பி கொடுக்க வேண்டிய தொகை குறித்து மக்கள் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் வங்கிகள் மற்றும் அதன் பணியாளர்களால் தறிகெட்ட முடிவுகளால் ஏற்பட்ட நஷ்ட ஈட்டுக்கு தாங்கள் பொறுப்பேற்க்க வேண்டுமா என்று ஆத்திரமுற்றுள்ள சாதாரண குடிமக்கள் பணமெல்லாம் திரும்பி கொடுக்க முடியாது என்று வாக்களித்துள்ளனர். இவர்கள் இவ்வாறு இந்த திட்டத்தை நிராகரிப்பது இது இரண்டாவது முறையாகும்.
பணம் திரும்ப கொடுக்கலாம் என 42 சதவீதத்தினரும், கூடாது என கூறி 58 சதவீதத்தினரும் வாக்களித்துள்ளனர்.
மக்களின் முடிவால் பீதியடைந்துள்ள ஐஸ்லாந்து பிரதமர் ஜொஹனா சிகுர்டார்டோட்டிர், இந்த வாக்கெடுப்பு நாட்டை பிளவுப்படுத்தி விடும் என்றும், இதனால் ஏற்படக்கூடிய அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சனைகளை தடுக்க அரசாங்கத்தால் என்ன முடியுமோ அது அனைத்தும் செய்யப்படும் என கூறியுள்ளார்.
இதற்கிடையே, காசெல்லாம் கிடையாது என ஐஸ்லாந்து வாசிகள் வாக்களித்துள்ளதற்கு பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து நாடுகள் ஏமாற்றம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக இரு அரசுகளும் பேசி ஒரு முடிவுக்கு வருவோம் என்று பிரிட்டன் கருவூலத்தின் மூத்த அமைச்சரான டானி அலெக்ஸாண்டர் கூறுகின்றார்.
Tags:
Crisis