விமானத்தை மோத விட்டு கடாபி மகன் படுகொலை; புரட்சி படை ஆதரவு பைலட் அதிரடி

 
லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக் காரர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் கடாபிக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கக் கூட்டு படைகள் இறங்கியுள்ளன. இது அதிபர் கடாபிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அவரது ராணுவம் நிலை குலைந்து ஓட்டம் பிடித்துள்ளது.

இந்நிலையில் கடாபியின் மகன் கிளர்ச்சியாளர்களின் தற்கொலைக்கு பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   கடாபியின் 6-வது மகன் ஹாமிஸ். இவர் ராணுவத்தில் 32-வது படை பிரிவில் பணிபுரிந்தார். இவர் பாப் அல்-அஷிஷியாவில் உள்ள ராணுவ குடியிருப்பில் தங்கியிருந்தார். சம்பவத்தன்று இவரது வீட்டின் மீது ஒரு ஜெட் விமானம் மோதி நொறுங்கியது. இதில், ஹாமிஸ் படுகாயம் அடைந்தார். உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த விமானத்தை கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட விமானி ஒருவர் இயக்கி உள்ளார். அவர் ஹாமிசை கொலை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் அவர் வீட்டின் மீது விமானத்தை மோதி தற்கொலை தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதை லிபியா அரசு மறுத்துள்ளது. இது போன்ற சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளது.
Previous Post Next Post