சாதிக்பாட்சாவின் உடல் தொடர்பான ரசாயன பரிசோதனைகளை 15 நாளில் முடிக்க விரைந்து முடிக்க ஏற்பாடு


சாதிக்பாட்சா இறந்தது எப்படி என்பது குறித்த ரசாயன பரிசோதனையை விரைந்து முடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.   2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மத்திய மந்திரி ஆ.ராசாவின் நண்பர் சாதிக்பாட்சா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதிக்பாட்சாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊரான பெரம்பலூருக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

சாதிக்பாட்சாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் டெக்கால் கூறும் போது, கழுத்து இறுக்கப்பட்டதால் சாதிக்பாட்சா மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார் என்று தெரிவித்தார். இவரது கழுத்தில் தழும்புகள் ஏற்பட்டுள்ள தோலை ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி இருப்பதாகவும், அது வந்த பின்னர்தான் சாதிக்பாட்சா எப்படி இறந்தார் என்பது தெரிய வரும் என்று அவர் கூறினார்.



சாதிக்பாட்சாவின் உடல் உறுப்புகள் ரசாயன பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. வழக்கமாக இது போன்ற பரிசோதனைகள் முடிய 2 மாதங்களுக்கு மேல் ஆகும். ஆனால் சாதிக்பாட்சாவின் உடல் தொடர்பான ரசாயன பரிசோதனைகளை 15 நாளில் முடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ரசாயன பரிசோதனை அறிக்கை வந்த பின்னர், சாதிக்பாட்சாவின் மரணத்தில் நிலவும் மர்மம் விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Previous Post Next Post