தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி விரிசலுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இதில் முதன்மையான காரணமாக கூறப்படுவது தொகுதி பங்கீடு விவகாரம்.தி.மு.க.-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டை உறுதி செய்ய அமைக்கப்பட்ட இரு கட்சிகளின ஐவர் குழு 3 தடவை சந்தித்துப் பேசியும் எந்த முடிவும் ஏற்படவில்லை.
காங்கிரசார் முதலில் 90 தொகுதி கேட்டனர். பிறகு 85, 80, 75, 70, 65 என்று குறைத்துக் கொண்டே வந்தனர். அதுபோல தி.மு.க. தரப்பில் முதலில் 51 தொகுதிகள் என்று கூறப்பட்டு பிறகு 53, 55, 57, 58 என்று உயர்த்திக் கொண்டே வந்தனர். கருணாநிதியும் சோனியா தூதர் குலாம்நபி ஆசாத்தும் சந்தித்து பேசிய போது காங்கிரசுக்கு 60 தொகுதி என்ற சுமூக முடிவு ஏற்பட்டது.
இதற்கான ஒப்பந்தத்தில் குலாம்நபி ஆசாத் கையெழுத்து போடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அவர் சொல்லாமல் டெல்லிக்கு புறப்பட்டு சென்ற பிறகே விரிசல் விழத் தொடங்கியது. இதனால்தான் குட்ட, குட்ட குனியாதீர்கள் என்று திராவிடர் கழகத்தலைவர் வீரமணி சொல்ல நேரிட்டது.
இந்த நிலையில் 63 தொகுதி வேண்டும். அதுவும் நாங்கள் கேட்கும் தொகுதிகளை தரவேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் போன் மூலம் கூறியதும் தி.மு.க. தலைவர்கள் கொந்தளித்து விட்டனர். அந்த அதிருப்தியின் உச்சக்கட்ட வெளிப் பாடாகவே மத்திய மந்திரி சபையில் இருந்து விலகுவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.
இதற்கிடையே காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள், தி.மு.க.வை திட்டமிட்டு, காய்களை நகர்த்தி வெளியேற்றி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காகவே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை காரணம் இல்லாமல் அவர்கள் நீடித்ததாக சொல்லப் படுகிறது. 60 தொகுதிகளை தி.மு.க. விட்டுக் கொடுக்க சம்மதித்த பிறகு வேண்டும் என்றே 63 தொகுதிகள் கேட்கப்பட்டதாம்.
தி.மு.க.விடம் இருந்து விலகி இருக்க காங்கிரஸ் மேலிட தலைவர்கள் முடிவு செய்ததற்கு ஸ்பெக்ட்ரம் விவகாரம்தான் முக்கிய காரணம் என்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி விசாரணை நடப்பதால் எதிர்காலத்தில் அதிக நெருக்கடிகளை சந்திக்காமல் இருக்க, இப்போதே தி.மு.க.விடம் இருந்து விலகி விடலாம் என்று நினைத்து காங்கிரசார் ஒதுங்குவதாக சொல்கிறார்கள்.
மேலும் மேற்கு வங்கம், கேரளம், அசாம், புதுச்சேரி மாநிலங்களில் காங்கிரசின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்து கொள்ள, வேறு வழியின்றி தி.மு.க.வை காங்கிரஸ் கழற்றி விட்டு விட்டதாக சொல்கிறார்கள். 5 மாநில சட்டசபை தேர்தலில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் முக்கியமான ஆயுதமாக கையில் எடுத்து பிரசாரம் செய்ய உள்ளனர்.
அந்த பிரசார பாதிப்பில் இருந்து தப்பித்து கொள்ளவே தி.மு.க. உறவை துண்டிக்க, காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை பயன்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.தி.மு.க.-காங்கிரஸ் தலைவர்கள் நல்ல நட்பாக பழகினாலும், அவர்களது உறவு நீறுபூத்த நெருப்பாக இருந்ததாகவும், அது தொகுதி பங்கீட்டில் வெடித்து விரிசல் ஏற்படுத்தி விட்டதாக ஒருசாரார் கூறுகிறார்கள்.
கடந்த சில மாதங்களாக ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோஷத்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்பட சில காங்கிரசார் எழுப்பினார்கள். தி.மு.க.-காங்கிரஸ் உறவு விரிசலுக்கு இதுதான் அடித்தளமாகி விட்டது என்று மற்றொருசாரார் கூறுகிறார்கள்.
இதற்கிடையே தி.மு.க. ஒதுக்கீடு செய்யும் தொகுதிகளை தங்கள் ஆதரவாளர்களுக்கு பெற தமிழக காங்கிரசில் உள்ள பல்வேறு கோஷ்டிகள் போட்டி போட்டு களம் இறங்கியது கடும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டதாக சொல்கிறார்கள். ராகுல் காந்தி இளைஞர் காங்கிரசுக்கு கண்டிப்பாக 7 தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது குழப்பத்தை உச்சக் கட்டத்துக்கு கொண்டு சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடைசியில் தி.மு.க. மிக, மிக வலுவாக உள்ள 10 தொகுதிகளை காங்கிரஸ் தலைவர்கள் பிடிவாதமாக கேட்டது தி.மு.க. தலைவர்களிடம் காங்கிரஸ் மீது அதிக வெறுப்பை ஏற்படுத்தி விட்டது. இப்படி பலவித காரணங்கள் ஒன்று சேர்ந்து தி.மு.க.-காங்கிரஸ் உறவை விரிசலாக்கி பிரித்து விட்டது.

Tags:
Political