பாகிஸ்தானின் சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் ஷாபாஸ் பட்டி இஸ்லாமாபாதில் இன்று சுட்டுக்கொல்லப்பட்டார்.இஸ்லாமாபாதின் ஷிபா மருத்துவமனையின் செய்தித்தொடர்பாளரான மருத்துவர் அஸ்மத் உல்லா குரேஷி இதைத் தெரிவித்தார்.
இஸ்லாமாபாதின் I-8/3 பகுதியில் அடையாளம் தெரியாத 2 பேர் ஷாபாஸ் பட்டியின் வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார். எனினும் காயம் காரணமாக வழியிலேயே அவர் உயிரிழந்தார்.பட்டியை நெருக்கமான ஓர் இடத்தில் இருந்து சுட்டுவிட்டு அவர்கள் ஒரு வாகனத்தில் ஏறித் தப்பிச் சென்றனர்.
பணிக்காக வீட்டில் இருந்து அமைச்சர் புறப்பட்டுச் செல்லும் வழியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக போலீஸ் அதிகாரி முகமது இக்பால் தெரிவித்தார்.கிறிஸ்துவரான பட்டிக்கு கடந்த காலங்களில் பயங்கரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் இருந்த நிலையில் இன்று மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஷாபாஸ் பட்டியின் கொலைக்கு பொறுப்பேற்பதாக பாகிஸ்தான் தலிபான் இயக்கம் அறிவித்துள்ளது. மதத்துவேஷ பேச்சு காரணமாகவே அவரைக் கொலைசெய்ததாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:
terrorism
