லிபியா மக்கள் எனக்காக உயிரைக் கொடுப்பார்கள்: கடாஃபி



என்னை பாதுகாப்பதற்காக லிபியா மக்கள் உயிரையும் கொடுப்பார்கள் என்று அந்நாட்டு அதிபர் கடாஃபி கூறியுள்ளார்.மேற்கத்திய தொலைக்காட்சி ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

"லிபியா மக்கள் அனைவரும் என்னை மிகவும் நேசிக்கிறார்கள். அவர்கள் எப்போதும் என் பக்கம் தான் உள்ளார்கள். என்னை பாதுகாப்பதற்காக அவர்கள் உயிரையும் கொடுப்பார்கள்." என்று கடாஃபி தெரிவித்தார்.

"தற்போது தெருக்களில் எந்த போராட்டங்களும் நடைபெறவில்லை. எங்கள் அரசுக்கு எதிராக யாரும் இல்லை. எனக்கு எதிராக மக்கள் போராட வேண்டிய காரணமே இல்லை." என்றும் அவர் கூறினார்.கடாஃபி, தனது பேட்டியை அரபி மொழியில் வழங்கினார். சில இடங்களில் ஆங்கிலத்திலும் பேசினார்.41 ஆண்டுகளாக லிபியாவின் அதிபராக உள்ள அவருக்கு எதிராக ஆங்காங்கே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பல்வேறு நாடுகளும் கடாஃபி பதவி விலக வேண்டும் என்று மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளன.
Previous Post Next Post