எகிப்தை தொடர்ந்து அல்ஜீரியாவிலும் மக்கள் போராட்டம்


எகிப்து நாட்டில் அந்நாட்டு அதிபரை பதவி விலக வலியுறுத்தி மக்கள் தீவிரமாக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் அதிபர் முபாராக் பதவி விலகினார். இதைப்போல அல்ஜீரியா நாட்டில் அந்நாட்டு மக்கள் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
 
அந்நாட்டு அதிபர் பௌடிபிளிக்காவை வரும் மார்ச் மாதத்திற்குள் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் அல்ஜீர்சிஸில் 10000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதில் பலர் கைது செய்யப்பட்டனர்.
 
அந்நாட்டில் பௌடிபிளிக்கா 12 அண்டுகளாக (1999 முதல்) அதிபராக பதவி வகித்து வருகிறார். இவருடைய ஆட்சியை எதிர்த்து அந்நாட்டு மனித உரிமை ஆர்வளர்கள், தேசியவாதிகள், வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் அடங்கிய போராட்டக்குழு வரும் மார்ச் மாதத்திற்குள் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தை நடத்த துவங்கியுள்ளனர்.
 
எகிப்து மக்கள் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதைப்போல வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை அந்நாட்டு மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
Previous Post Next Post