தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை துறை தகவல் வெளியிட்டது. இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் பல்வா மற்றும் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.சி.பி.ஐ. காவலில் அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கை குறித்து பாரதீய ஜனதா தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பாராளுமன்ற பொதுகணக்கு குழுவும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது.
பொதுகணக்கு குழு முன்பு சி.பி.ஐ. இயக்குனர் ஏ.பி.சிங் நேற்று ஆஜர் ஆகி ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து விளக்கம் அளித்தார். அப்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது உண்மை என்றும் இந்த விவகாரத்தில் குற்றப் பின்னணி குறித்து விசாரித்து வருவதால் எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று துல்லியமாக கூற முடியாது என்று குறிப்பிட்டார்.
இதுவரை நடந்த விசாரணையின் அடிப்படையில் ரூ.50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளதாக ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல் தெரிவிக்கையில் ரூ.22 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக குறிப்பிட்டு இருந்தது. தற்போது ரூ.50 ஆயிரம் கோடி இழப்பை சி.பி.ஐ. கண்டுபிடித்து உள்ளது.
இதுகுறித்து பாராளுமன்ற பொதுகணக்கு குழு முரளி மனோகர் ஜோஷி நிருபர்களிடம் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ. இயக்குனர் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
சி.பி.ஐ.யும், அமலாக்கப் பிரிவும் நிதி இழப்பீடு குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் இதில் ரூ.40 ஆயிரம் கோடி முதல் ரூ.50 ஆயிரம் கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளதாக அவர் தெரிவித்ததாக கூறினார்.தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை நடப்பதால் இழப்பீடு தொகை மேலும் அதிகரிக்கும் இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. தனது விசாரணையை விரிவுபடுத்தி உள்ளது. நேற்று டி.பி.ரியாலிட்டி மற்றும் ஸ்வான் நிறுவன பங்குதாரரான வினோத் கோயங்காவை சி.பி.ஐ. அலுவலகத்துக்கு வர வழைத்து விசாரணை நடத்தினார்கள்.இதேபோல் யுனிடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திராவிடமும் சி.பி.ஐ. 4 மணி நேரம் விசாரணை நடத்தியது.

Tags:
Correption