ஈராக்கில் இறுதி சடங்கில் கார் குண்டு தாக்குதல்; 48 பேர் பலி

ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் வாபஸ் ஆக உள்ளன. இந்த நிலையில் அங்கு தற்போது குண்டு வெடிப்பு சம்பவங்கள் மற்றும் தற்கொலை தாக்குதல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.  ( !!! )

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நடந்த 4 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 200 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக இத்தாக்குதல்கள் “ஷியாட்” பிரிவினர் வாழும் பகுதியில் தான் அதிகம் நடை பெறுகிறது.   சமீபத்தில் பாக்தாத் நகரில் “ஷியாட்” பிரிவினர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

அதில் பலியானவர்களுக்கு நேற்று இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அப்போது இறுதி சடங்கு நடந்து கொண்டிருந்த இடத்தில் தீவிரவாதிகள் கார்குண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதனால் அப்பகுதி முழுவதும் கரும் புகையுடன் தீப்பிடித்து எரிந்தது. இச்சம்பவத்தில் 48 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

சமீபத்தில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் பிரதமர் நூரி அல்-மாலிகி கூட்டணி அரசுக்கு எதிராக நடைபெறுவதாக கருதப்படுகிறது. இதற்கிடையே ஈராக்கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அரபு நாடுகள் முடிவு செய்துள்ளன.  

இது குறித்த மாநாடு வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் அதை குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் எதிரொலியாக தான் இது போன்ற தாக்குதல்கள் நடை பெறுகின்றன என பாக்தாத் மாகாண கவுன்சில் தலைவர் சுமில் நசீர்
அல்-சாய்தி தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post