![]() |
| முக்கிய குற்றவாளிகள் |
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு கொடைக்கானல் பிளசன்டேசன் ஓட்டல் வழக்கில் கடந்த 2000-ம் ஆண்டில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் பெரும் கலவரம் ஏற்பட்டது.
இந்த கலவரத்தின் போது தர்மபுரியில் கோவை வேளாண்மை கல்லூரி மாணவிகள் 44 பேர் மற்றும் 2 ஆசிரியர்கள் வந்த பஸ் எரிக்கப்பட்டது. இதில் கோகிலவாணி, காயத்ரி மற்றும் ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம் முக்கிய குற்றவாளிகளான நெடுஞ்செழியன், முனியப்பன், ரவீந்திரன் ஆகியோருக்கு கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி தூக்கு தண்டனை விதித்தது.
இந்த தண்டனையை மதுரை ஐகோர்ட்டு கடந்த 2007 டிசம்பர் 6-ஆம் தேதி உறுதி செய்தது. இதனை எதிர்த்து மூவரும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.
சுப்ரீம் கோர்டும் இதனைஉறுதி செய்தது. இந்நிலையில் தங்களுக்கு விதிக்கபட்ட தண்டணையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. பி.சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ். நிஜ்ஜார் ஆகியோர் இதனை விசாரித்தனர். விசாரணையில் 3 பேரின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்தனர்.
மேலும் 3 பேரின் அப்பீல் மனுகுறித்து தமிழக அரசை பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
தற்பொழுது இவர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:
Justice
