சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள நிங்சியா ஹூயி எனும் மாகாணத்தைச் சேர்ந்தவர் லீ டாங்டாங் என்பவர். இவர் கம்யூனிஸ்ட் கட்சியிலும், உள்ளூர் ஆட்சியிலும் பல உயர் பதவிகளை வகித்தவர்.
பாவோஜி நகரில் கட்சி துணைத் தலைவர் பதவி வகித்ததோடு, துணை மேயராகவும் இருந்துள்ளார். சியான்யாங் நகரில் கட்சித் தலைவராகவும், ஷான்சி மாகாணத்தின் துணை ஆளுநராகவும் 1998 முதல் 2009 வரை தொடர்ந்து முக்கிய பதவிகள் வகித்து வந்தார்.
இந்தக் காலகட்டத்தில் அவர் பதவியைப் பயன்படுத்தி, ஏறத்தாழ 11.7 லட்சம் மில்லியன் டாலர் (ஏறத்தாழ 50 லட்சம் ரூபாய்) லஞ்சம் வாங்கினார் எனக் கூறப்பட்டது. அவர் உயர்பதவி வகித்த கால அளவில் ஆட்டோ தொழிலகங்கள், கட்டுமான நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களிடமிருந்து பெரும் தொகைகளை லஞ்சமாகப் பெற்றார் எனக் குற்றம் சாட்டப்பட்டது.
அதே போல, பல கட்டுமான நிறுவனங்களுக்கு அரசுப் பணி ஒப்பந்தங்கள் வாங்கித் தருவதாகக் கூறி பல தனி நபர்களிடம் லஞ்சம் வாங்கியுள்ளார். வேலை வாங்கித் தருவதாகவும் பலரிடம் இவர் லஞ்சமாகப் பணம் பெற்றுள்ளார். சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சொங்கிங் நகரில் இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது லீ டாங்டாங் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
வழக்கின் முடிவில் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் அவருடைய சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து அவர் நீக்கம் செய்யப்பட்டார். வழக்கின் ஆரம்பத்திலேயே அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டு லஞ்சமாகப் பெற்ற பணத்தின் ஒரு பகுதியை அவர் ஒப்படைத்ததால் அவருக்கு ஆயுள் தண்டனை எனும் குறைவான தண்டனையே வழங்கப்பட்டதாக நீதிபதி தெரிவித்தார்.
டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் மற்றும் சென்டர் பார் மீடியா ஸ்டடீஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் லஞ்சம் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவு:
இந்தியாவில் லஞ்சம்
டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் மற்றும் சென்டர் பார் மீடியா ஸ்டடீஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் லஞ்சம் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவு:
- ஓர் ஆண்டில் மட்டும் ரூ.883 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
- அரசுத்திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள மூன்றில் ஒருவர் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.
- போலீஸ் 215,
- வீட்டுவசதி வாரியம் 157,
- பத்திரப்பதிவு 124,
- மின்சாரம் 105,
- மருத்துவம் 87,
- வங்கி 83,
- ரேஷன் 45,
- வனத்துறை 24,
- குடிநீர் 24,
- பள்ளிக்கூட கல்வி 12,
- கிராம வேலை வாய்ப்பு 7
Tags:
Justice

