டெல்லியில் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து முதல்-மந்திரி மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி மத்திய அரசை விமர்சித்து பேசினார். அவர் பேசும் போது நக்சலைட்டுகள், தீவிரவாதிகள், சமூக விரோதிகளை ஒடுக்கும்படி மாநில அரசுக்கு மத்திய அரசு கட்டளையிடுகிறது.
ஆனால் தீவிரவாதிகளுக்கு இணையான ஆயுதங்களை மாநில போலீசார் கொள் முதல் செய்ய முயற்சிக்கும் போது கிடைப்பது இல்லை. ஆஸ்திரியா, ஜெர்மனி போன்ற நாடுகள் காஷ்மீர், ஆந்திரா, ஒரிசா, பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு குறிப்பிட்ட ஆயுதங்கள் சப்ளை செய்ய மறுக்கிறது.
இதற்கு மத்திய அரசு சரியாக நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றார்.
இதற்கு ப.சிதம்பரம் மறுப்பு தெரிவித்தார், இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுத்து உள்ளோம். அதே நேரத்தில் துருக்கி, ரஷியா, இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் இதே தரமான ஆயுதங்களை வாங்கி கொள்ளலாம் என கடிதமும் எழுதி இருக்கிறோம் என்றார்.
அப்போது மேலும் பேசிய நரேந்திரமோடி மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்தி விட்டதாக கூறுகிறீர்கள். ஆனால் மாவோஸ்டுகள் தாக்குதல் சக்தி இப்போது அதிகரித்து இருக்கிறது. அவர்கள் அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்களை வைத்து இருக்கிறார்கள். அவர்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.போலீசாரும், பொதுமக்களும் அதிக அளவில் கொல்லப்பட்டு உள்ளனர். என்றார்.
இதற்கு பதில் அளித்த ப.சிதம்பரம் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள இடங்களில் அவர்கள் முன்னேறி விடவில்லை. ஒடுக்கப்பட்டு வருகிறார்கள் என்றார்.மேலும் பேசிய நரேந்திர மோடி, பணமோசடி விவகாரங்கள் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு கூறுகிறது. ஆனால் சுவிட்சர்லாந்து நாட்டில் இந்தியர்களின் ஏராளமான கறுப்பு பணம் கிடக்கிறது.
இதை திரும்ப கொண்டுவர மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். அதற்கு ப.சிதம்பரம் இந்த மாநாட்டில் பண மோசடி தொடர்பாக விவாதிக்கவில்லை. எனவே அது பற்றி பேச வேண்டாம் என்றார். இப்படி நரேந்திரமோடியும், ப.சிதம்பரமும் அடிக்கடி விவாதத்தில் ஈடுபட்டதால் முதல்-மந்திரிகள் கூட்டத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Tags:
Crime