பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரை விவாதத்துக்கு பிரதமர் மன் மோகன்சிங் பதில் அளித்து பேசினார். அவர் கூறியதாவது:-
நாட்டில் பண வீக்கம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இதை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. பண வீக்கத்தை கட்டுப்படுத்த கொண்டு வந்துள்ள கொள்கையால் வேலை வாய்ப்பு வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படாது. இந்த ஆண்டு இறுதிக்குள் பண வீக்கம் 7 சதவீதத்துக்கு கீழ் வந்து விடும் என நம்புகிறோம். நாட்டில் தேவையான அளவுக்கு உணவு பொருட்கள் இருக்கின்றன. கோதுமை, அரிசி போன்றவை அதிக இருப்பு உள்ளது. எனவே இவற்றின் விலை உயராமல் பார்த்து கொள்ள முடியும்.
கடந்த 18 மாதமாக விலைவாசி உயர்வு பிரச்சினையாக இருந்துள்ளது. இந்த நிலைமை இனி மாறும். தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் மூலம் பண வீக்கத்தை நிச்சயம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். தொலை தொடர்பு துறையிலும், காமன் வெல்த் விளையாட்டிலும் துரதிர்ஷ்டவசமாக சில விஷயங்கள் நடந்து விட்டன. அதில் முறைகேடுகள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் அதில் இருந்து தப்ப முடியாது.
இந்தியா சட்டத்தின்படி நடக்கும் நாடு. சட்டம் ஆட்சி செய்யும் நாட்டில் தவறு செய்யும் யாராக இருந்தாலும் தண்டனை பெற்றே தீர வேண்டும். தொலை தொடர்பு துறையை பொறுத்தவரை அரசின் சிறந்த கொள்கைகளால் அபரீதமான வளர்ச்சியை பெற்று உள்ளது. தொலை தொடர்பு துறையில் எழுந்துள்ள விவகாரத்தில் உண்மை நிச்சயம் வெளிவரும். இது தொடர்பாக விசாரிக்கும் புலனாய்வு அமைப்புகளுக்கு அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும்.
இஸ்ரோ அலைவரிசை ஒதுக்கீட்டில் பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறுவது அடிப்படை ஆதாரம் இல்லா தது. எஸ்.பாண்ட் அலை வரிசைகளை வர்த்தக ரீதியாக ஒதுக்கீடு செய்வது இல்லை என அரசு உறுதியான முடிவுகளை எடுத்துள்ளது. கறுப்பு பணம் பிரச்சினை நீண்ட காலமாகவே இருக்கிறது. வெளிநாடுகளில் இருக்கும் கறுப்பு பணத்தை கொண்டு வருவதில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதற்காக அனைத்து கட்சிகளும் உட்கார்ந்து பேசி உரிய முடிவுகளை எடுக்க வேண்டும். அதில் தரப்படும் ஆலோசனைகள் நிச்சயம் பரிசீலிக்கப்படும்.
பாகிஸ்தானுடன் உள்ள பிரச்சினைகளை தீர்க்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களுடன் நட்புடன் செயல்படவே நாங்கள் விரும்புகிறோம். காஷ்மீரில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் வந்து விட்டால் அவர்களை கைது செய்யலாம். ஆனால் அவர்களை சுடக்கூடாது. இதை ஒரு போதும் ஏற்க முடியாது.
இவ்வாறு பிரதமர் மன் மோகன்சிங் கூறினார்.

Tags:
Correption