மராட்டிய மாநிலம் நாசிக் துணை கலெக்டராக இருந்தவர் யஷ்வந்த். இவர் நாசிக் வெங்காய சந்தையை பார்வையிட்டு விட்டு அலுவலகத்துக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார். அவருடைய உதவியாளர் ராஜேந்திர காலே, டிரைவர் கைலாஷ் ஆகியோரும் இருந்தனர்.
மான்மட் என்ற இடம் வழியாக அவர்கள் சென்று கொண்டிருந்த போது வழியில் பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்று நின்று கொண்டருந்தது. அதில் பெட்ரோலுடன் மண்எண்ணையை கலப்படம் செய்து கொண்டிருந்தனர். இதை பார்த்து விட்ட துணை கலெக்டர் யஷ்வந்த் காரில் இருந்து இறங்கி அவர்களிடம் விசாரித்தார்.
அப்போது கலப்பட காரர்கள் பெட்ரோலை யஷ்வந்த் மீது ஊற்றி தீ வைத்தனர். இதில் அவர் உடல் தீப்பற்றி எரிந்தது. உடனே உதவியாளரும், டிரைவரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். எந்த உதவியும் கிடைக்காமல் யஷ்வந்த், எரியும் தீயுடன் போராடினார். பின்னர் ரோட்டில் விழுந்து துடித்தார். அரை மணி நேர மாகியும் யாரும் உதவிக்கு வரவில்லை.
35 நிமிடம் கழித்து தான் போலீசார் அங்கு வந்தனர். அதற்குள் யஷ்வந்த் இறந்து போனார். யஷ்வந்த் மீது தீ வைத்த ஷிண்டே என்பவர் உடலிலும் தீப்பற்றிக் கொண்டது. அவன் உடல் 50 சதவீதம் கருகி இருந்தது. அவன் தனது ஆட்களுடன் தப்பி சென்று விட்டான்.
பின்னர் அவனை நாசிக் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான். யஷ்வந்தின் உடல் இறுதி சடங்கு நாசிக்கில் இன்று நடந்தது. ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த மராட்டிய முதல்-மந்திரி பிரதிவிராஜ் சவான் உத்தர விட்டு உள்ளார்.

கொலை தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags:
Crime