ஜார்க்கண்ட்டில் 9 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை


ஜார்க்கண்ட் மாநிலம் லூகுர் காட்டுப்பகுதியில் ஏராளமான மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த காட்டுப் பகுதிக்கு லதேகர் மாவட்ட போலீசார் விரைந்தனர். அவர்களுடன் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களும் சென்றனர்.

நேற்றிரவு மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். போலீசார் மீது மாவோயிஸ்டுகள் சரமாரியாக சுட்டனர். இதையடுத்து போலீசாரும் அதிரடி தாக்குதலை நடத்தினார்கள். இருதரப்பினருக்கும் இடையே விடிய, விடிய துப்பாக்கி சண்டை நடந்தது. இன்று அதிகாலை மாவோயிஸ்டுகள் தரப்பில் இருந்து சுடுவது நின்றது.

சில மாவோயிஸ்டுகள் தப்பி ஓடி விட்டனர்.  மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்த இடத்தில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது 9 மாவோயிஸ்டுகள் உடலில் குண்டுகள் பாய்ந்து பலியாகி கிடப்பது தெரிந்தது.

அந்த 9 உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாவோயிஸ்டுகள் உடல்கள் கிடந்த பகுதியில் ஏராளமான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த ஆயுத குவியல்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Previous Post Next Post